பறவைகளின் பசிக்கு பழ மரங்கள்: ரூ.5000 நிதி அளித்த விவசாயி; முதல்வர், ரஜினிக்கு கோரிக்கை!

பறவைகளின் பசிக்கு பழ மரங்கள்: ரூ.5000 நிதி அளித்த விவசாயி; முதல்வர், ரஜினிக்கு கோரிக்கை!
News Image

பறவை குருவிகள் பாவம் பறவைகள் பசியாற பழ மரங்களை நடுவதற்கு முதலில் நான் 5 ஆயிரம் தருகிறேன் என வேப்பங்கொட்டை மூலம் கிடைத்த பணத்துடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயி.

பழ மரங்களை நட வேண்டும்

மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி மாரியப்பன் இவர் தனது நிலத்தில் உள்ள அரை ஏக்கர் பகுதியில் விவசாயம் செய்யும் சோளம் கம்பு உள்ளிட்ட திணைகளை குருவி பறவைகளுக்காக ஒதுக்கி செய்துவருகிறார். இதேபோன்று நாய் குரங்கு உள்ளிட்டவர்களுக்கும்  தினசரி உணவுகளை வழங்கிவருகிறார். மதுரை மாவட்டத்தில் சாலையோரங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் நடப்படும் போது பயனற்ற மரங்கள் நடப்படுவதாகவும் இதனால் குருவி பறவைகள் போன்றவை பசிபோக்க முடியாத நிலையில் அழிந்து வருவதாகவும், இது போன்ற தேவையற்ற மரங்கள் நடுவதை தவிர்த்து வேப்பமரம், புளியமரம், இலந்தை மரம், மஞ்சநெத்தி, கொடுக்காய்மரம், மாமரம் உள்ளிட்ட குருவி பறவைகளுக்கு பலன் தரும் வகையிலான மரங்களை நடுவதற்கு அனைவரும் நிதி தர வேண்டும் எனவும் இதற்கு முன் உதாரணமாக தான் வெப்பங்கொட்டையை பிறக்கி அதன் மூலமாக கிடைத்த 3000 ரூபாய் பணத்துடன் பழ மரங்களை நட வேண்டும் என கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

வேப்பங்கொட்டை பிறக்கி பணம்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி மாரியப்பன்...," மதுரை முழுவதிலும் தேவையற்ற மரங்களை நட்டு வைத்துள்ளார்கள் அது தீவிரவாதிகள் போல அனைவரையும் பயமுறுத்துகிறது; இது போன்ற மரங்களால் எந்த பலனும் இல்லை மரங்களை நம்பி இருக்கக்கூடிய குருவி பறவைகளுக்கு பசியாற்றும் வகையிலான வேப்பமரம் புளியமரம் நாவல் மரம் உள்ளிட்டவைகளை நட வேண்டும் எனவும் கோவில்களில் மனிதர்களுக்கு அன்னதானம் போடப்படுகிறது ஆனால் பறவை குருவிகள் பசியோடு அலையும் நிலையில் அவற்றின் பசியை போக்க பலன் தரக்கூடிய பழ மரங்களை நட வேண்டும் என தெரிவித்தார். குருவி பறவைகளை காப்பாற்ற முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நான் முதற்கட்டமாக ஐந்தாயிரம் ரூபாய் நிதியாக தர தயாராக இருக்கிறேன் வேப்பங்கொட்டை பிறக்கி அதன்மூலமாக கிடைத்த 3 ஆயிரம் ரூபாய் இன்று வழங்குவதற்காக வந்துள்ளேன்.

நாய் இழுத்துச் சென்று பரிதாபத்திற்குரிய நிலைக்கு இருக்கிறது

இதேபோல எனது அண்ணன் ரஜினிகாந்த் இதற்கு நிதி உதவி வழங்குவார். தொடர்ந்து நடிகர் நடிகைகளும் உதவ வேண்டும். ஆனால் அரசு அதிகாரிகள் பலன் இல்லாத தேவையில்லாத மரங்களை நடுகிறார்கள் பலன் தரக்கூடிய மரங்களை நட்டால் மட்டுமே குருவி பறவைகள் உள்ளிட்ட பல உயிரினங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார். பழ மரங்களை நட்டால் மக்களும் தேவையானவற்றின் பசிக்கு பயன்படுத்திக் கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.  சாலைகளில் சுற்றி தெரியும் பிராணிகளுக்கு தடுப்பூசி போட்டு அதனை பாதுகாப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மதுரை பேரையூர் பகுதிகளில் மான் தண்ணீரின்றி உயிரிழந்து வருகிறது. அதனை நாய் இழுத்துச் சென்று பரிதாபத்திற்குரிய நிலைக்கு இருக்கிறது எனவும் தனது வேதனையை வெளிப்படுத்தினார். விலங்குகளுக்கு உணவு கிடைக்காத நிலையில் குடியிருப்புகளுக்குள் வருகிறது என்றார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks