இளம் பெண் கர்ப்பம் - போலீசாருக்கு தகவல் கொடுத்த டாக்டர்

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் சம்பவத்தன்று உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் இளம் பெண்ணிடம் கணவர் குறித்த விவரத்தை கேட்டுள்ளனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணான பதிலை கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த டாக்டர்கள் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதில் இளம் பெண்ணின் கர்ப்பம் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிறுவனுடன் இளம் பெண் உல்லாசம்

ஆற்றூரை சேர்ந்த இளம்பெண் விமான பணியாளர்கள் தொடர்பான ஒரு ஆண்டு டிப்ளமோ படிப்புக்காக குழித்துறையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்து உள்ளார். அதே பாடப்பிரிவில் களியக்காவிளை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும் சேர்ந்து உள்ளார். இதில் ஆச்சரியப்படும் வகையில் அந்த பிரிவில் அவர்கள் 2 பேர் மட்டுமே படித்துள்ளனர். இதனால் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருக்கம் அதிகமானது. தொடர்ந்து 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

பின்னர் சிறிது நாளில் இளம்பெண் களியக்காவிளையில் உள்ள சிறுவனின் வீட்டுக்கு பெற்றோர் இல்லாத நேரத்தில் வந்து சென்றுள்ளார். அப்போது இளம்பெண்ணின் கட்டாயத்தின் பேரில் 2 பேரும் உடலுறவு கொண்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் தொடர்ந்து பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதில் இளம்பெண் கர்ப்பமானார். எனினும் அவர் கர்ப்பமானதை பெற்றோரிடம் கூறாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து 8 மாதம் கடந்த நிலையில் இளம்பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துமனைக்கு சென்றுள்ளார். அப்போது தான் அவர் கர்ப்பமானது வெளிச்சத்துக்கு வந்தது. இந்த தகவல் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதைத் தொடர்ந்து சிறுவனை கட்டாயப்படுத்தி அவனது வீட்டுக்கு சென்று உடலுறவில் ஈடுபட்டதாக அவனது தாயார் தரப்பில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் இளம்பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Source: Read Full Article