காலிபாஃப் ஈரானிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, உறுதியான முடிவுகளை அடைவதே நமது ஒரே அளவுகோல் என்று அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு விஷயம் நடக்கும் வரை, அமெரிக்கா உடன் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அது குறித்து இப்போது பார்க்கலாம்.

காலிபாஃப் கூறியது என்ன.?

வாஷிங்டனுக்கும் டெஹ்ரானுக்கும் இடையே நடந்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக, அமெரிக்கா உடன் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையில், ஈரானின் தலைமை பேச்சுவார்த்தையாளராக செயல்பட்டு வரும் முகமது பாகெர் காலிபாஃப், ஒரு முக்கிய அறிக்கையை இன்று வெளியிட்டார். அதில், ஈரானிய மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வரை, எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஈரான் ஏற்றுக்கொள்ளாது என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஈரானிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காலிபாஃப், "எதிரியின் வார்த்தைகள் மற்றும் வாக்குறுதிகளில் நம்பிக்கை இல்லை. நமது கடமைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, உறுதியான முடிவுகளை அடைவதே நமது ஒரே அளவுகோல்" என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே அச்சுறுத்தல் விடுத்துள்ள ட்ரம்ப்

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று அளித்த பேட்டி ஒன்றில், அமெரிக்காவும் ஈரானும் ஒரு மிக நல்ல உடன்படிக்கைக்கு மிக அருகில் இருப்பதாக கூறினார். அதே நேரம், வாஷிங்டன், தான் விரும்புவதை பெறாவிட்டால், வேறு வழியில் அதை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது, தாக்குதல் நடத்துவதையே குறிப்பதாக உள்ளது. ஃபாக்ஸ் நியூஸில் ஒளிபரப்பான தனது மருமகள் லாரா ட்ரம்பின் நேர்காணலுக்குப் பிறகு, ட்ரம்பின் இந்த கூற்று வெளியானது.

“அனைத்து அதிகாரங்களும் அமெரிக்காவின் கையில் உள்ளன“

ஈரானியர்கள் சிறந்த பேச்சுவார்த்தையாளர்கள் என்பதை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனாலும், தற்போது அமெரிக்காவே மேலோங்கிய நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ராணுவ ரீதியாக ஈரான் தோல்வியடைந்துவிட்டதாக ட்ரம்ப் கூறுகிறார். "ஆனால், நாங்கள் ஒரு மிகச் சிறந்த ஒப்பந்தத்தை நெருங்கிவிட்டோம். அதை எங்களால் செய்து முடிக்க முடிந்தால், அது நல்லது. இல்லையென்றால், நாங்கள் போர் துறையுடன் இணைந்து செயல்படத் தொடங்குவோம்." என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. அந்த நாளில் தான், அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அன்று முதல், மத்திய கிழக்கு ஒரு போர்க்களமாக இருந்து வருகிறது. தற்போது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது.

இதற்கிடையே, சில தரைவழி வசதிகளின் செயலாக்கத் திறன்களை இஸ்ரேலிய தாக்குதல்கள் சீர்குலைத்ததைத் தொடர்ந்து, உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த தெற்கு பார்ஸ் எரிவாயு வயலில் உள்ள மூன்று கடல்சார் தளங்களில், எரிவாயு உற்பத்தியை ஈரான் மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருப்பதால், போர்ச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் என்று தோன்றவில்லை. இதனால், மீண்டும் போர் தொடங்கிவிடுமோ என்ற அச்சமே, உலக நாடுகள் மத்தியில் பெருமளவில் நிலவி வருகிறது.

Source: Read Full Article