அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் போர் தொடங்கிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்காவின் சென்ட்காம் உறுதிப்படுத்தியபடி, கோருக் மற்றும் கெஷ்ம் ஆகிய இரண்டு ஈரானிய தீவுகளில் உள்ள ரேடார் மற்றும் ட்ரோன் கட்டுப்பாட்டு தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு தற்போது ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி வான்வெளிப் படை, இந்த தாக்குதலை நடத்திய அமெரிக்க விமானத் தளத்தை குறிவைத்து தாக்கியதோடு, அந்த இலக்கு அழிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

ஈரானில் தாக்குதல் நடத்தப்பட்டது எங்கு.?

அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM), இந்த வார இறுதியில் ஈரானின் கோருக் மற்றும் கெஷ்ம் தீவுகளில் உள்ள ட்ரோன் ரேடார் மற்றும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு தளங்கள் மீது தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியதாக கூறியுள்ளது. வார இறுதியில், சர்வதேச கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் MQ-1 பிரிடேட்டர் ட்ரோன் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக CENTCOM தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

https://t.co/d73wZXmCYn

— U.S. Central Command (@CENTCOM) June 1, 2026

அமெரிக்காவின் சென்ட்காம் கூறியது என்ன.?

ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்புகள், ஒரு தரைக்கட்டுப்பாட்டு மையம் மற்றும் இரண்டு தாக்குதல் ட்ரோன்களை அமெரிக்க போர் விமானங்கள் அழித்து பதிலடி கொடுத்ததாகவும், இந்த தாக்குதல்களில் எந்த அமெரிக்க ராணுவ வீரரும் காயமடையவில்லை என்றும் சென்ட்காம் மேலும் கூறியுள்ளது. கடந்த வாரமும் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தின. ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே ஈரானிய ட்ரோன் செயல்பாட்டு தளத்தை குறிவைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் ஒரு அமெரிக்க விமானத் தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

அமெரிக்க தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானியப் படைகள் தெற்கு ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள சிரிக் தீவில் அமைந்திருந்த ஒரு விமானப்படைத் தளத்தை குறிவைத்ததாக, இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையை (IRGC) மேற்கோள் காட்டி ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எந்த அமெரிக்க விமானப்படைத் தளம் குறிவைக்கப்பட்டது என்பதை அந்த நிறுவனம் குறிப்பிடவில்லை.

மீண்டும் போர் தொடங்குமா.?

அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை ஒருபுறம் இழுபறியில் இருக்க, மறுபுறம் இரு நாடுகளும் மெல்ல மெல்ல தாக்குதல்களை தொடங்கி வருவது, உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சின்ன சின்ன தாக்குதல்கள் அப்படியே பெருகி, மீண்டும் பேராக மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

அதற்கு ஏற்றார்போல், பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் மாறி மாறி நிபந்தனைகளை விதித்து, ஒரு ஒப்பந்தத்தை எட்டவிடாமலேயே செய்து வருகின்றன. ட்ரம்ப்பும் ஒருபுறம் மிரட்டல்களையும் விடுத்து வருகிறார். அதனால், எந்த நேரத்திலும் போர் தொடங்கிவிடுமோ என்ற நிலை தான் உள்ளது.

Source: Read Full Article