விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!

விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
News Image

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது. தனது முதல் தேர்தல் களத்திலே வெற்றியை விஜய் வசமாக்கி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. இது அரசியல் ரீதியாக பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கியிருந்தாலும், திரையுலகிலும் அவரை நேரடியாகவும், மறைமுகமாகவும் விமர்சித்த பலருக்கும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது.

அண்ணாமலை - விசாகன் சந்திப்பு:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வழிகாட்டியாக கொண்டு நடித்து வந்த விஜய், பின்னாளில் அவருக்கே சவால் விடும் அளவிற்கு வளர்ந்தார். இணையத்தில் விஜய் - ரஜினி ரசிகர்கள் மோதல் உச்சம் பெற்ற சம்பவங்களும் நடந்தது. விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடனான தனது நட்பை மேலும் வலுப்படுத்தினார்.

இது ரஜினிகாந்த் விஜய்யை எதிர்ப்பதாகவே மறைமுகமாகவே காட்டியது. மேலும், திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தூதாக செயல்பட்டதாகவும் ரஜினிகாந்த் மீது விமர்சனங்கள் எழுந்தது. பின்னர், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில், ரஜினிகாந்தின் 2வது மருமகனும், செளந்தர்யா ரஜினிகாந்தின் கணவருமான விசாகன் அண்ணாமலையை கடந்த சில நாட்களுக்கு முன்பு நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். அண்ணாமலை பாஜக-வில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்க உள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.

ரஜினி ரசிகர்கள் ஆதரவு:

ரஜினிகாந்த் தொடங்குவதாக இருந்த கட்சியில் இணைய அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவர் பாஜக-வில் இணைந்தார். ரஜினிகாந்த் மீது நல்ல மதிப்பும், மரியாதையும் கொண்ட அண்ணாமலை அவரது ரசிகர்கள் ஆதரவை தன்வசப்படுத்தும் வகையில், அவரது மருமகனை உள்ளே  இழுக்கவும் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம், ரஜினிகாந்தும் தான் தவறவிட்ட ஆட்சி அதிகாரத்தை அண்ணாமலைக்குச் செல்ல அஸ்திவாரமாக தனது மருமகனையே அனுப்பிவைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தவெக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது ரஜினிக்கும், அவரது ரசிகர்களுக்கும் முழு திருப்தி இல்லை என்றே கூறப்படுகிறது. அண்ணாமலையும் ரஜினிகாந்தின் மருமகன் தான் தொடங்கப்படும் கட்சியில் இணைந்தால் அவரது ரசிகர்களின் வாக்குகளை அள்ளலாம் என்ற எண்ணத்தில் உள்ளார்.

பொதுச்செயலாளர் பதவியா?

இதுதொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை மட்டுமே தற்போது நடந்து முடிந்துள்ள நிலையில், அண்ணாமலை தற்போது வெறும் இயக்கமாக மட்டுமே தொடங்கியுள்ள நிலையில் கட்சியாக அது மாறும்போது விசாகனுக்கு பொதுச்செயலாளர் அல்லது அதற்கு நிகரான பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலை கட்சி தொடங்கினால் அதில் ரஜினியின் மருமகன் முக்கிய பொறுப்புடன் களமிறங்கினால் அந்த கட்சி திமுக-வைக் காட்டிலும் தவெக-வை மிகப்பெரிய அளவில் எதிர்த்து அரசியல் செய்யும் என்றே கருதப்படுகிறது.

ஏனென்றால், கூட்டணி ஆட்சியுடன் ஆட்சியை நடத்தி வரும் விஜய்யின் பக்கமே இருந்தால்தான் அதிகார பங்கைப் பெற முடியும் என்று பல கட்சிகளும் தவெக பக்கமே அணி சேருவார்கள் என்பது உறுதி. இதனால், அடுத்த அரசியல் களமும் தமிழ்நாட்டில் தவெக -வை மையப்படுத்தியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks