அதிமுக மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. பாதிப்புகளுக்கு காரணமானவர்கள் தங்களை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும். - அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.

செல்லூர் ராஜு தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது

அதிமுக மீண்டும் வலிமை பெற வேண்டும் என தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் தன்னுயிரை மாய்த்து கொண்ட அதிமுக தொண்டர் பூக்கடை மகேந்திரனுக்கு படத்திற்கு மதுரை மாநகர அதிமுக சார்பில் மதுரை ஜான்சிராணி பூங்காவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏராளமான அதிமுகவினர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "அதிமுகவின் ஒற்றுமை, எதிர்காலத்திற்க்காக தன்னுயிரை மகேந்திரன் நீத்துள்ளார்.

மகேந்திரனுக்காக வீர அஞ்சலியை செலுத்துகிறோம்

அதிமுக மகேந்திரனுக்காக வீர அஞ்சலியை செலுத்துகிறோம். மகேந்திரன் வீரமரணம் என்பது அதிமுக தொண்டர்களின் உணர்வுகளை வெளிக்காட்டுகிறது. அதிமுக மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. பாதிப்புகளுக்கு காரணமானவர்கள் தங்களை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நோக்கங்கள் வெற்றி பெற அதிமுக வீர் கொண்டு ஏழ வேண்டும். மகேந்திரன் உயிரிழப்பை படிப்பினையாக எடுத்துக் கொண்டு அதிமுகவில் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை செயல்பட வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா தன்னை பற்றி பேசியவர்கள், ஏசியவர்கள் குறித்து கவலைப்படாமல் அவர்களை கட்சியில் சேர்த்து தாயுள்ளத்தோடு நடந்து கொண்டனர்.

மகேந்திரனின் மரணம் இறுதி மரணமாக இருக்க வேண்டும்

அவர்களை போலவே அதிமுகவில் உள்ள ஒவ்வொரு தலைவர்களும் நடந்து கொள்ள வேண்டும். மகேந்திரனின் மரணம் இறுதி மரணமாக இருக்க வேண்டும் அதிமுக எழுச்சி பெற வேண்டும். ஜெயலலிதா முக்கடல் சூழ்ந்த பாரதத்தின் மூன்றாவது பெரிய இயக்கமாக அதிமுகவை மாற்றிக் காட்டினார். அதே போன்று தொண்டர்களுக்கு மதிப்பளித்து அதிமுக வலிமை பெற தலைவர்கள் செயல்பட வேண்டும்" என கூறினார்.

Source: Read Full Article