தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதலே ஒரு அரசுப்பணியாளர் போல காலை 9 மணிக்கு தலைமைச் செயலகத்திற்கு வரும் விஜய் மாலை 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருக்கிறார்.

தலைமைச் செயலகத்தில் விஜய்:

இதுவரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பணியாற்றியவர்கள் யாரும் ஒரு அரசு அதிகாரி போல தலைமைச் செயலகத்தில் பணியாற்றது இல்லை. ஆனால், விஜய் தலைமைச் செயலகத்தில் மாலை வரை இருப்பதால் அரசு அதிகாரிகளும் தங்களது பணி நேரம் முடியும் வரை அலுவலகத்திலே இருந்து பணியாற்றி வருகின்றனர்.

கோப்புகளில் விரைந்து கையெழுத்து:

பொதுவாக, இதற்கு முன்பு இருந்த முதலமைச்சர்களிடம் கோப்புகளில் கையெழுத்து வாங்குவதற்காக அவர்களது அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தால் மீண்டும் அதிகாரிகளிடம் திரும்பி வருவதற்கு மிகவும் தாமதம் ஆவது வழக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்கள் பாதி நாட்கள் அல்லது அதற்கும் குறைவான நேரமே தலைமைச் செயலகத்தில் இருப்பதால் கோப்புகளில் கையெழுத்து இடுவது தாமதமாகி வந்தது.

ஆனால், விஜய் தனது முழு பணி நேரத்தையும் தலைமைச் செயலகத்திலே செலவிட்டு வருகிறார். இதனால், அவரது மேசைக்கு அனுப்பும் கோப்புகளை ஆய்வு செய்து உடனடியாக கையெழுத்திட்டு வருகிறார். இதற்கு முன்பு இருந்த கோப்புகள் முதலமைச்சரின் கையெழுத்தைப் பெற்று அதிகாரிகளிடம் மீண்டும் திரும்பி வந்து பணிகளைத் தொடங்குவதில் மிகவும் தாமதம் இருந்து வந்தது. தற்போது விஜய்யின் நடவடிக்கையால் இந்த தாமதம் குறைந்துள்ளது.

செயலாளர்கள், அதிகாரிகள் ஆச்சரியம்:

விஜய்யின் செயல்பாடுகளை கண்டு தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஒவ்வொரு துறையின் செயலாளர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும், முதலமைச்சரே விரைந்து கோப்புகளில் ஆய்வு செய்து கையெழுத்து இடுவதால் அந்தந்த துறை அமைச்சர்களும் கோப்புகளில் உடனடியாக கையெழுத்து இடுகின்றனர். மேலும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் பல உத்தரவுகளை பிறப்பித்து இருப்பதால் பலரும் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

பொதுவாக, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் பலரும் பணி நேரத்தில் அங்கே இருக்கும் தேநீர் கடைகளிலே பல நேரம் பொழுதை போக்கி வருவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது. ஆனால், தற்போது இந்த நிலையும் மாறி வருவதாக கூறப்படுகிறது.

முதலமைச்சரே தலைமைச் செயலகத்தில் மாலை வரை இருப்பதால் அவர்களும் தங்களது அலுவலக நேரங்களில் அலுவலக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அலுவலக பணிகளும் வேகமாக நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

Source: Read Full Article