கல்விக் கடனில் பெரிய மாற்றம்? அடமானம் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடன் பெற வாய்ப்பு!

கல்விக் கடனில் பெரிய மாற்றம்? அடமானம் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடன் பெற வாய்ப்பு!
News Image

இந்தியாவில் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்லூரி படிப்பை நிறைவேற்றுவது வங்கிகள் வழங்கக்கூடிய கல்விக் கடன்கள் தான். ஒரு சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர் ஒரு பெரிய கல்வி நிறுவனத்தில் தனக்கு பிடித்த படிப்பை படிக்க வேண்டும் என விரும்புகிறார் ஆனால் அவருடைய பெற்றோரிடம் அதற்கு ஏற்ப நிதி வசதி இல்லை. இந்த சூழலில் வங்கிகளில் கல்வி கடன் பெற்று அந்த படிப்பை முடிக்கலாம். படிப்பை முடித்த பின் கல்வி கடனை வங்கிகளுக்கு திரும்ப செலுத்தி விட வேண்டும்.

இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான மாணவர்களின் உயர் படிப்பு கனவை நிறைவேற்றுவது வங்கிகள் வழங்கக்கூடிய இந்த கல்வி கடன்கள் தான். தற்போது கல்வி கடன் வழங்கக்கூடிய விதிகளில் சில மாற்றங்களை கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. தற்போது கல்லூரிகளில் அட்மிஷன் நடைபெற்று வரக்கூடிய வேளையில் ஏராளமான மாணவர்கள் கல்விக்கடன்களை நாடி வங்கிகளுக்கு செல்ல இருக்கக்கூடிய சூழலில் மத்திய அரசு இந்த முக்கியமான ஆலோசனையை நடத்தி வருகிறது.

தற்போது வங்கிகள் 7.5 லட்சம் ரூபாய் வரை எந்த ஒரு அடமானமும் பெறாமல், எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல் கல்வி கடன்களை வழங்குகின்றன. 7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் செல்லும்போது அதற்காக ஏதேனும் ஒரு collateral காட்ட வேண்டி இருக்கிறது. இந்த சூழலில் free collateral education loan பிரிவில் அதாவது எந்த ஒரு அடமானமும் இல்லாமல் கடன் பெறுவதற்கான கல்வி கடன் உச்ச வரம்பை தற்போதுள்ள 7.5 லட்சத்திலிருந்து இன்னும் அதிகமாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக நிதி அமைச்சகம் மற்றும் கல்வித் துறை அமைச்சக அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் மாணவர்களுக்கு 7.5 லட்சம் லட்சத்திற்கும் அதிகமான பணம் தங்களுடைய மேற்படிப்புக்காக எந்த ஒரு அடமானமும் இல்லாமல் கடனாக கிடைக்கும். மத்திய அரசின் இந்த அனுமதி வந்துவிட்டால் வங்கிகளும் தயங்காமல் மாணவர்களுக்கான கடன் வரம்பினை அதிகரிக்கும்.

இந்தியாவில் கல்வி கட்டண செலவுகள் அதிகரித்து வரக்கூடிய சூழலில் பணம் இல்லாததால் மாணவர்களின் படிப்பு தடைப்பட்டு விடக்கூடாது, வங்கியில் போதிய கடன் கிடைக்காததால் ஒரு மாணவரின் எதிர்கால கனவு நின்று போய் விடக்கூடாது என்ற நோக்கத்தில் மத்திய அரசு இந்த கடன் வரம்பை உயர்த்த ஆலோசனை நடத்தி வருகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டால் அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய் வரை எந்த ஒரு அடமானமும் இல்லாமல் மாணவர்கள் கல்வி கடனாக வாங்க முடியும். இது கோடிக்கணக்கான இந்திய மாணவர்களின் உயர் படிப்பு கனவை நிறைவேற்ற உதவும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks