“என் மீது கொதிக்கும் பாலை ஊற்றினார்கள்!” - திமுக அமைச்சர் மீது மருமகள் பகீர் குற்றச்சாட்டு! - முழு தொகுப்பு...

“என் மீது கொதிக்கும் பாலை ஊற்றினார்கள்!” - திமுக அமைச்சர் மீது மருமகள் பகீர் குற்றச்சாட்டு! - முழு தொகுப்பு...

அமைச்சர் பெயருக்குக் களங்கம் விளைவிக்க சதி? அண்ணன் மகன் ஆவேச விளக்கம் - சேலத்தில் பற்றி எரியும் அரசியல் விவாதம்!

சேலம்: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட அனலில் இருக்கும் வேளையில், சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனின் குடும்ப விவகாரம் ஒரு மிகப்பெரிய 'பொலிட்டிக்கல் வெடிகுண்டாக' வெடித்துள்ளது. அமைச்சரின் அண்ணன் மகன் சண்முகத்தின் மனைவி தேவி (37), தனது வழக்கறிஞர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்து, தனது கணவர் குடும்பத்தினர் தன் மீது 'கொதிக்கும் பாலை' ஊற்றிப் படுகொலை செய்ய முயன்றதாகக் கூறி அதிர வைத்துள்ளார். திராவிட மாடல் அரசு பெண்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில், ஆளுங்கட்சி அமைச்சரின் குடும்பத்திலேயே ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த அநீதி, அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய ‘சென்சேஷனை’ கிளப்பியுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் தனது தீக்காயங்களின் புகைப்படங்களைக் கண்ணீருடன் காட்டிய பல் மருத்துவர் தேவி, "கடந்த 2025 அக்.11-ஆம் தேதி எனது மகனைப் பார்க்கச் சென்றபோது, என் மீது கொதிக்கும் பாலை ஊற்றிக் கொடுமைப்படுத்தினர். இதில் என் உடலில் 35 சதவீத காயங்கள் ஏற்பட்டன. இதுகுறித்து எஸ்.பி அலுவலகத்தில் முறையிட்ட பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், அமைச்சரின் ‘அதிகாரத் தலையீட்டால்’ அந்த வழக்கு எவ்வித மேல் நடவடிக்கையுமின்றி ‘குளோஸ்’ செய்யப்பட்டுவிட்டது" எனப் ‘பகீர்’ கிளப்பினார். மேலும், தன் மீதே பொய் வழக்குப் போடப்பட்டுள்ளதாகவும், நீதியைப் பெறத் தான் எங்கும் செல்லத் தயார் என்றும் அவர் ‘சவால்’ விடுத்துள்ளார். ஒரு அமைச்சரின் மருமகளே வீதியில் இறங்கிப் போராடும் இந்தச் சம்பவம் சேலம் சின்னத் திருப்பதி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக 'ரியாக்‌ஷன்' கொடுத்த அமைச்சரின் அண்ணன் மகன் சண்முகம், இது முழுக்க முழுக்கத் திட்டமிடப்பட்ட 'அரசியல் ஸ்டண்ட்' என மறுத்துள்ளார். "எங்களுக்குள் குடும்பப் பிரச்சனை இருப்பது உண்மைதான், அதற்காக நீதிமன்றத்தை நாடியுள்ளோம். ஆனால், தேர்தல் நேரத்தில் அமைச்சரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க வேண்டும் என்றே சிலர் பின்னணியில் இருந்து கொண்டு தேவியைத் தூண்டி விடுகின்றனர்" என அவர் கவுண்டர் கொடுத்துள்ளார். 




"யாரிடமும் அதிர்ந்து பேசாத மென்மையான சுபாவம் கொண்ட அமைச்சர் ராஜேந்திரன், இருதய சிகிச்சை முடிந்து மக்கள் பணியில் பம்பரமாகச் சுழன்று வரும் வேளையில், அவர் மீது இப்படி ஒரு பழியைச் சுமத்துவது அபாண்டமானது" எனத் தெரிவித்த சண்முகம், இந்த விவகாரத்தைச் சட்டப்படி சந்திப்போம் என ‘வார்னிங்’ கொடுத்துள்ளார்.

அமைச்சரின் செல்வாக்கிற்குத் தடை போட எதிர்க்கட்சிகள் செய்யும் சதி இதுவென ஒரு தரப்பும், பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வேண்டும் என மறுதரப்பும் சமூக வலைதளங்களில் மல்லுக்கட்டி வருகின்றன. "அமைச்சர் ராஜேந்திரன் அனைத்துத் தரப்பு மக்களிடமும் மரியாதையைப் பெற்றவர், அவர் மீது பழி சுமத்துவது ஏற்கத்தக்கதல்ல" எனச் சேலம் வாழ் பொதுமக்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் அமைச்சரின் மருமகளே சுமத்தியுள்ள இந்த ‘பவர்ஃபுல்’ குற்றச்சாட்டு, சேலம் மாவட்ட திமுகவிற்கு ஒரு மிகப்பெரிய 'சைக்கலாஜிக்கல் பிரஷரை' உருவாக்கியுள்ளது.


 - ஆ.மாரியப்பன்

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks