“ஆரியக் கூட்டம் தடுத்த கல்வி.. அமைச்சராக்கி அழகு பார்த்த ஸ்டாலின்!” - சேலத்தில் கோவி. செழியன் நெகிழ்ச்சி!

“ஆரியக் கூட்டம் தடுத்த கல்வி.. அமைச்சராக்கி அழகு பார்த்த ஸ்டாலின்!” - சேலத்தில் கோவி. செழியன் நெகிழ்ச்சி!

‘தமிழ்நாடு தலைகுனியாது’ கூட்டத்தில் எகிறிய அரசியல் பிபி: 2026 தேர்தல் டெல்லிக்கு வைக்கும் செக் - திமுக அதிரடி!

சேலம்: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், சேலம் மாவட்டம் தலைவாசல் பேருந்து நிலையப் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பிரம்மாண்ட பரப்புரைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்துகொண்டு தனது ‘பவர்ஃபுல்’ பேச்சால் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். குறிப்பாக, தனது பதவி உயர்வு குறித்து அவர் பேசிய ‘சென்டிமென்ட்’ கலந்த சமூக நீதி உரை, கூட்டத்தில் இருந்தவர்களை நெகிழச் செய்தது. "எந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உயர்கல்வி பயிலக் கூடாது என்று ஆரியக் கூட்டம் தடுத்ததோ, அதே சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை உயர்கல்வித் துறை அமைச்சராக்கிச் சமூக நீதியை நிலைநாட்டியவர் நமது முதலமைச்சர் ஸ்டாலின்" என அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

தனது உரையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை ‘லெப்ட் அண்ட் ரைட்’ வாங்கிய அமைச்சர், "அதிமுகவின் கூட்டணி முடிவுகள் இப்போது சென்னையில் எடுக்கப்படுவதில்லை, அவை டெல்லியில் தான் ‘ஃபிக்ஸ்’ செய்யப்படுகின்றன" எனச் சாடினார். வரும் 2026 தேர்தல் என்பது வெறும் தமிழகத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, இது தமிழகத்திற்கும் டெல்லிக்கும் இடையே நடக்கும் ஒரு மிகப்பெரிய ‘பைட்’ என்றும் அவர் வர்ணித்தார். பிரதமர் மோடி தொடர்ந்து தமிழகத்தைப் புறக்கணித்து வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் தனது கூட்டணியை எப்படி ‘ஸ்ட்ராங்’ ஆகத் தக்கவைத்துக் கொண்டு அனைத்துத் தேர்தல்களிலும் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்று வருகிறார் என்பதைச் சுட்டிக்காட்டி, "புதிதாக அரசியல் கட்சித் தொடங்குபவர்கள் முதலமைச்சரிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என மறைமுகமாகப் ‘பஞ்ச்’ வைத்தார்.


இந்தக் கூட்டத்தில் ஓ.பி.எஸ் உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்து வருவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், நடுநிலை பத்திரிகைகள் சந்தேகப்படும் தொகுதிகளில் கூட திமுக லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் ‘மெகா’ வெற்றி பெறும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்தார். கலைஞர் காலத்திலேயே கூட்டணி மாற்றங்கள் இருக்கும், ஆனால் ஸ்டாலின் தலைமையிலான இந்த ‘திராவிட மாடல்’ அரசு ஒரு மாறாத வெற்றிக் கூட்டணியை உருவாக்கி சாதனை படைத்துள்ளது என அவர் ‘சர்டிபிகேட்’ கொடுத்தார். கள்ளக்குறிச்சி எம்பி மலையரசன், மாவட்டத் துணைச் செயலாளர் சின்னதுரை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற இந்தக் கூட்டம், சேலம் கிழக்கு மாவட்டத்தில் திமுகவின் தேர்தல் ‘கேம்பெயின்’னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

- ஆ.மாரியப்பன்

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks