தஞ்சையில் அதிரடி சவுண்ட் செக்! பேருந்து ஹாரன்களை டயருக்கு அடியில் வைத்து நசுக்கிய போலீஸ்!

தஞ்சையில் அதிரடி சவுண்ட் செக்! பேருந்து ஹாரன்களை டயருக்கு அடியில் வைத்து நசுக்கிய போலீஸ்!

விதிமீறல் வாகனங்களுக்கு ஆப்பு - சீட் பெல்ட் அணிந்த லாரி டிரைவருக்கு நூறு ரூபாய் கிஃப்ட்!

தஞ்சாவூர்: தஞ்சை மாநகரில் ஒலி மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் போக்குவரத்து காவல்துறை இன்று அதிரடி ‘சரமாரி’ சோதனையில் இறங்கியது. தஞ்சை ரோகிணி மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக செக்போஸ்ட்டில், போக்குவரத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, காதுகளை பிளக்கும் வகையில் ‘ஏர் ஹாரன்’களை அலறவிட்டபடி வந்த தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மருத்துவமனை பகுதி என்பதால் ‘சைலன்ஸ் ஜோன்’ விதிகளை மீறிய அந்த வாகனங்களுக்கு ஸ்பாட்டிலேயே ‘செக்’ வைத்த காவலர்கள், தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை உடனடியாகப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அந்த ஹாரன்களை வெறும் அபராதத்துடன் விட்டுவிடாமல், ஒரு அதிரடிப் பாடத்தை புகட்ட போலீசார் முடிவு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹாரன்களை அதே பேருந்துகளின் டயர்களுக்கு அடியில் வைத்து நசுக்கித் தரைமட்டமாக்கினர். இந்த ‘ஆன்-தி-ஸ்பாட்’ அதிரடியைப் பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் ஆடிப்போயினர். இனிமேல் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களைப் பொருத்தினால் ‘லைசென்ஸ்’ ரத்து செய்யப்படும் என போலீசார் ‘வார்னிங்’ கொடுத்தனர். இந்த அதிரடி நடவடிக்கையால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.


இந்த ‘நெகட்டிவ்’ ஆக்ஷன்களுக்கு மத்தியில் ஒரு ‘பாசிட்டிவ்’ சம்பவமும் அங்கு அரங்கேறியது. அந்த வழியாக சீட் பெல்ட் அணிந்து முறையாக லாரி ஓட்டி வந்த ஒரு ஓட்டுநரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அபராதம் விதிக்கப்போகிறார்கள் என அவர் பயந்த நிலையில், விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றியதற்காக அந்த ஓட்டுநரை போக்குவரத்து காவலர் மனதாரப் பாராட்டினார். மேலும், அவருக்கு ஊக்கமளிக்கும் விதமாகத் தனது பாக்கெட்டில் இருந்து 100 ரூபாயை எடுத்து ‘அன்பளிப்பாக’ வழங்கி கௌரவித்தார். ஒரே இடத்தில் தப்பு செய்தவர்களுக்கு ‘தண்டனை’யும், விதிமுறையைப் பின்பற்றியவர்களுக்கு ‘வெகுமதி’யும் வழங்கிய போலீசாரின் இந்த ‘யுனிக்’ ஸ்டைல் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks