தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் நடைபெற உள்ள 17-ஆவது சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான பணிகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழுவீச்சில் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மக்களின் தேவைகளைப் பிரதிபலிக்கும் வகையிலான தேர்தல் அறிக்கையைத் தயார் செய்ய 10 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்துடன் தேர்தலை நோக்கி நகரும் அதிமுக-விற்கு இந்தக் குழுவின் அறிக்கை முதுகெலும்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உறுப்பினர்கள்:
கழகத்தின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது :
நத்தம் இரா. விசுவநாதன், M.L.A. (கழக துணைப் பொதுச் செயலாளர்).
C. பொன்னையன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்).
முனைவர் பொள்ளாச்சி V. ஜெயராமன், M.L.A. (கழக தேர்தல் பிரிவுச் செயலாளர்)
D. ஜெயக்குமார் (கழக அமைப்புச் செயலாளர்)
C.Ve. சண்முகம், M.P. (கழக அமைப்புச் செயலாளர்)
செ. செம்மலை (கழக அமைப்புச் செயலாளர்)
பா. வளர்மதி (கழக மகளிர் அணிச் செயலாளர்)
O.S. மணியன், M.L.A. (கழக அமைப்புச் செயலாளர்)
R.B. உதயகுமார், M.L.A. (சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்)
முனைவர் எஸ்.எஸ். வைகைச்செல்வன் (கழக இலக்கிய அணிச் செயலாளர்)
இந்தக் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பட்ட மக்களின் கோரிக்கைகளையும், கருத்துகளையும் நேரடியாகக் கேட்டறிய உள்ளனர். மக்களின் தேவைகளை உள்வாங்கி, தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கியத் தரவுகளைச் சேகரிப்பதே இக்குழுவின் முதன்மைப் பணியாகும்.
இக்குழுவின் விரிவான சுற்றுப் பயணத் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்று கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
.jpg)