உபி, பீகாரை ஓரம் கட்டிய தமிழ்நாடு: மோடி ஆட்சியில் 100 நாள் வேலைத் திட்ட நிதி மும்மடங்கு அதிகரிப்பு!!
இந்தியாவின் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தமிழகத்தில் ஒரு இமாலயச் சாதனையைப் படைத்துள்ளது. 2006-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், கடந்த 19 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மட்டும் சுமார் ரூ. 1,01,447 கோடி நிதியை ஈர்த்துத் தந்து ஒரு அமைதிப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில், இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக் காலமான 2006 முதல் 2014 வரையிலான 8 ஆண்டுகளில் தமிழகத்திற்கு வெறும் 16,549 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்த நிலையில், கடந்த 2020 முதல் 2025 வரையிலான வெறும் 5 ஆண்டுகளில் மட்டும் 54,819 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆட்சிக் காலத்தை விட மூன்று மடங்கு அதிகம் என்பது ஆதாரபூர்வமான தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகம் பெற்றுள்ள நிதி ஒதுக்கீடு என்பது தேசிய அளவில் ஒரு பெஞ்ச்மார்க் ஆக மாறியுள்ளது. 23 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலம் 2023-24 நிதியாண்டில் 9,800 கோடி ரூபாயைப் பெற்ற நிலையில், வெறும் 7.5 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு 12,603 கோடி ரூபாயைப் பெற்று டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. பீகார் மாநிலமோ வெறும் 6,200 கோடி ரூபாயை மட்டுமே பெற்றுள்ளது. தமிழகத்தின் இந்த அதிரடி வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம், இங்குள்ள பெண்களின் பங்கேற்பு விகிதம் (Participation Rate) ஆகும். தேசிய அளவில் பெண்களின் பங்கேற்பு 58 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் இது 86 சதவீதமாக இருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பீகார் மற்றும் உபி மாநிலங்களில் தினசரி ஊதியம் ரூ.230-க்கும் குறைவாக உள்ள நிலையில், தமிழகத்தில் ரூ.319 வழங்கப்படுவதும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்க பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது.
நிதி ஒதுக்கீடு ஒருபுறம் சாதனை படைத்தாலும், அரசியல் களத்தில் இது ஒரு வார் ஜோன் ஆகவே காட்சியளிக்கிறது. "மத்திய அரசு கூலி வழங்க நிதியை விடுவிக்காமல் முட்டுக்கட்டை போடுகிறது" என்று முதலமைச்சர் ஸ்டாலின் அட்டாக் செய்ய, "நாங்கள் காங்கிரஸ் காலத்தை விட மும்மடங்கு நிதியை வாரி வழங்கியுள்ளோம்; மாநில அரசு கணக்குகளைச் சரியாகச் சமர்ப்பிக்காததே தாமதத்திற்குப் பின்னணியில் உள்ள டெக்னிக்கல் க்ளிட்ச்" என்று அண்ணாமலை மற்றும் எல். முருகன் தரப்பு பதில் கொடுத்து வருகிறது
மேற்கு வங்க மாநிலத்திற்கு ஊழல் புகார்களால் ஒரு பைசா கூட வழங்கப்படாத நிலையில், தமிழ்நாடு தொடர்ந்து விதிகளுக்கு உட்பட்டு இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து நிதியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 2006-ல் வெறும் 184 கோடியில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், இன்று 1 லட்சம் கோடி என்ற மிரட்டலான இலக்கை எட்டி லட்சக்கணக்கான ஏழைத் தாய்மார்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்துள்ளது என்பதே தமிழகத்தின் உண்மை நிலவரத்தைக் காட்டுகிறது.

.jpg)
