வெற்றித் தொலைக்காட்சி தொடங்க ஆலோசனைக் கூட்டம்; ஆதவ் அர்ஜுனா நிதி ஒதுக்கீடு; பிரபல மீடியா ஆட்கள் களமிறக்கத் தீவிரம்!
சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான விஜய், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சியின் செய்திகளையும் கொள்கைகளையும் மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் வகையில், தனியாக ஒரு சானலை தொடங்கத் திட்டமிட்டிருப்பதாகத் தற்போது அரசியல் வட்டாரங்களில் எக்ஸ்க்ளூசிவ் தகவல் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சேனலுக்கு 'வெற்றித் தொலைக்காட்சி' (Vettri TV) எனப் பெயரிட ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.
கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் வியூகங்களுக்கான செய்திகளை, பிரதான ஊடகங்களைச் சாராமல், நேரடியாக மக்களைச் சென்றடையச் செய்வதே இந்தச் சேனலின் மெயின் அஜெண்டா என்று கூறப்படுகிறது. இந்தத் தொலைக்காட்சி ப்ராஜெக்ட்டுக்கு ஆதவ் அர்ஜுனா அவர்கள் நிதி வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பினான்சியல் டாக்குமென்டேஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சேனல் தொடங்குவதற்கான அரசு அனுமதி பெறும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருவதாகவும், தொலைக்காட்சி ஒளிபரப்பில் அனுபவம் வாய்ந்த சில பிரபல ஊடகவியலாளர்களைக் கட்சியுடன் இணைத்துக்கொண்டு களமிறக்கத் தீவிரப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த முயற்சி, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கேம்பெயினிங்கிற்கு ஒரு புதிய டைமன்ஷனைக் கொடுக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
in
அரசியல்
