கேரளா புதிய சாதனை: கேரளா நிறுவன தினத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் பெருமித அறிவிப்பு!
"கடவுளின் தேசம்" மற்றும் கல்வியில் சிறந்த மாநிலம் போன்ற பெருமைகளைக் கொண்டுள்ள அண்டை மாநிலமான கேரளா, தற்போது புதியதொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. இந்தியாவில் (India) வறுமையில் இருந்து விடுபட்ட முதல் மாநிலம் (Poverty Free State) என்ற இலக்கை அடைந்துள்ளதாக, கேரள நிறுவன தினமான இன்று (நவம்பர் 01, 2025) அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கேரள நிறுவன தினம் இன்று 69வது ஆண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், கேரள சட்டமன்ற விதி 300-ன் கீழ் முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். சட்டமன்றத்தில் பேசிய அவர், இந்தியாவில் வறுமையில் இருந்து விடுபட்ட முதல் மாநிலம் என்ற குறிப்பிடத்தக்க இலக்கை கேரளா அடைந்து புதிய சாதனை படைத்துள்ளது என்று பெருமிதத்துடன் கூறினார்.
வறுமை ஒழிப்பில் கேரளா கடந்து வந்த நீண்ட பயணத்தை முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். ஒருங்கிணைந்த கேரளா உருவான தொடக்க ஆண்டுகளில், குறிப்பாக 1961-62 காலக்கட்டத்தில், வறுமை விகிதம் மிகவும் அதிகமாக இருந்தது. அப்போது கிராமப்புறத்தில் 90.7% என்ற அளவிலும், நகரப் பகுதிகளில் 88.89% என்ற அளவிலும் மக்கள் வறுமையில் வாடினர்.
இந்த நிலையில், கடுமையான போராட்டங்கள் மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சித் திட்டங்களின் விளைவாக, கேரளா இன்று அந்த நிலைமையை மாற்றி, வறுமையை ஒழித்த முதல் மாநிலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது என்று பினராயி விஜயன் கூறியுள்ளார். மலையாளிகளின் நீண்ட கால கனவு நனவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Happy Kerala Piravi! On the 69th anniversary of our State’s formation, we celebrate a historic milestone: Kerala has officially been declared an ‘Extreme Poverty-Free State’. This marks the fulfilment of a collective dream, a promise that no one in Kerala will go without food,… pic.twitter.com/yQEFJTtd5t
— Pinarayi Vijayan (@pinarayivijayan) November 1, 2025
