ஓய்வூதியதாரர்களுக்கு நீதி: ரூ.95 கோடி நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு! Madras University Pensioners: High Court Orders Immediate Payment of ₹95 Cr Arrears

சென்னை பல்கலைக்கழகம்: ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.95 கோடி பாக்கித் தொகை – உடனடியாகச் செலுத்த ஹைக்கோர்ட் உத்தரவு

சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.95 கோடிக்கும் அதிகமான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதிய பாக்கித் தொகையான 95 கோடியே 44 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கும், பல்கலைக்கழகத்திற்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தேன்மொழி என்பவர், தனக்குச் சேர வேண்டிய ரூ.18 லட்சத்து 17 ஆயிரம் ஓய்வூக்காலப் பலன்கள் வழங்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலில் வழக்கு தொடர்ந்தார்.அந்தத் தொகையை உடனடியாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தபோதும், பல்கலைக்கழகம் அதனைச் செலுத்தத் தவறியதால், தேன்மொழி மீண்டும் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார்.**நிலுவை விவரங்கள் வெளியீடு:இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பில், ஓய்வூதியப் பலன்களை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதுடன், நிலுவைத் தொகை குறித்த விரிவான விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.


2015 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டம்.பயனாளிகள்: ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதோர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் என மொத்தம் 465 பேருக்கு நிலுவை உள்ளது.  95 கோடியே 44 லட்சத்து 21 ஆயிரத்து 85 ரூபாய். வழக்கை விசாரித்த நீதிபதி, 465 பேருக்கு இவ்வளவு பெரிய தொகை நிலுவையில் உள்ளதைக் குறித்துக் கடுமையான கவலையைத் தெரிவித்தார். பாக்கித் தொகையை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று தமிழக நிதித்துறைச் செயலருக்கு (Finance Secretary) உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 21 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk