குட்கா விற்பனை: கிண்டியில் கூல் பார் கடைக்கு சீல்; உரிமையாளர் கைது! Cool Bar Sealed in Guindy for Illegal Sale of Gutkha; Owner Arrested by Police.

 குட்கா விற்பனை: கிண்டியில் கூல் பார் கடைக்கு சீல்; உரிமையாளர் கைது! Cool Bar Sealed in Guindy for Illegal Sale of Gutkha; Owner Arrested by Police.

சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்த 230 புகையிலைப் பாக்கெட்டுகள் பறிமுதல்; உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி நடவடிக்கை.

சென்னை பெருநகரில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிண்டி பகுதியில் சட்டவிரோதமாகக் குட்கா புகையிலைப் பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த கூல் பார் கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இந்தக் கடை உரிமையாளர் கைது (Arrest) செய்யப்பட்டு அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ஈக்காட்டுத்தாங்கல், ஜே.என். சாலையில் உள்ள ஒரு கூல் பார் கடையில் போலீசார் தீவிரமாகக் கண்காணித்துச் சோதனை நடத்தினர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பாக்கெட்டுகளைக் கடைக்குள் மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கிண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடை உரிமையாளரான புதுக்கோட்டையைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஹான்ஸ், கூலிப், விமல் உள்ளிட்ட 230 குட்கா புகையிலைப் பாக்கெட்டுகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், காவல்துறையின் பரிந்துரையின்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்து அந்தக் கடைக்கு நிரந்தரமாகச் சீல் வைத்தனர். கைது செய்யப்பட்ட சிவகுமார் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks