புதிய உச்சத்தைத் தொட்ட ஆபரணத் தங்கம்: நிபுணர்கள் கணிப்புப்படி ரூ. 1 லட்சம் நோக்கி நகர்வு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்றைய (அக்டோபர் 1, 2025) மாலை நிலவரப்படி, தங்கம் சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து, ரூ. 87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு சுமார் ரூ. 2,480 வரை தங்கம் விலை உயர்ந்துள்ளது, நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு முறை விலை மாற்றம்
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. அக்டோபர் 1, 2025 அன்று காலை மற்றும் மாலை என இரண்டு முறை விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காலை நிலவரம் நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம், காலையில், ஒரு கிராம் ரூ. 10,890 (+ரூ. 30) ஒரு சவரன் - ரூ. 87,120 (+ரூ. 240) மாலையி, ஒரு கிராம் ரூ. 87,600 (+ரூ. 480) ஒரு சவரன் ரூ. 10,950 (+ரூ. 60) விற்பனையாகிறது.
தொடர் விலை உயர்வுக்கான காரணங்கள்
2024 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை தங்கத்தின் விலை சுமார் 30 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டும் இந்த விலை ஏற்றம் தொடர்கிறது. இதற்கு வல்லுநர்கள் கூறும் முக்கியக் காரணங்கள்:
மத்திய வங்கிகளின் கொள்முதல்: சீனா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தங்களது மத்திய வங்கிகளில் அமெரிக்க டாலருக்குப் பதிலாகத் தங்கத்தை வாங்கிச் சேமித்து வருவதால், தங்கத்தின் உலகளாவிய தேவை அதிகரித்துள்ளது.
புவிசார் அரசியல் பதற்றம்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்ய மத்திய வங்கியும் தங்கக் கையிருப்பை அதிகரித்து வருகிறது. இதனை மற்ற நாடுகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளது.
இந்தக் காரணங்களால், வருங்காலங்களில் தங்கம் விலை மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, அக்டோபர் 20, 2025-க்குள் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய் வரை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
