இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.94,880-ஐ தொட்டது தங்கம்; வெள்ளி கிலோ ரூ.2 லட்சத்தைக் கடந்து புதிய உச்சம்!
சென்னை, அக்டோபர் 15: தங்கம் விலை கடந்த சில நாள்களாக அசுர வேகத்தில் புதிய உச்சங்களை எட்டி வரும் நிலையில், இன்றும் விலை உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.94,880 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதன் மூலம், தங்கம் விலை விரைவில் ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்:
நேற்று (அக். 14) விலை
ஒரு கிராம் தங்கத்தின் விலை, நேற்று, ரூ. 11,825 விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.35 உயர்ந்து, ரூ.11,860 விற்பனையாகிறது.
இன்று (அக். 15) விலை
ஒரு சவரன் தங்கத்தின் விலை, நேற்று, ரூ. . 94,600 விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 280 உயர்ந்து, ரூ. 94,880 விற்பனையாகிறது.
நேற்று (அக். 14), தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, சவரனுக்கு ரூ.1,960 அதிகரித்து, முதல் முறையாக ரூ.94,600 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை நிலவரம்:
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று (அக். 14), வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 அதிகரித்து ரூ.206-க்கும், கிலோவுக்கு ரூ.9 ஆயிரம் உயர்ந்து ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இதன்மூலம், வெள்ளி விலையும் கிலோவுக்கு முதல்முறையாக ரூ.2 லட்சத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது.
வல்லுநர்கள் கருத்து:
பண்டிகைக் காலத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களைக் கவலையடையச் செய்துள்ளது. சர்வதேச சந்தை மாற்றங்கள், டாலரின் மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்களே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.