'வைப்ரண்ட் கிராமத் திட்டம்' (Vibrant Village Programme) மூலம் 150 எல்லைக் கிராமங்கள் மேம்பாடு; செலா சுரங்கப் பாதையால் தவாங்கில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!
புது தில்லி, அக்டோபர் 12: இந்திய - சீன எல்லையில் அமைந்துள்ள கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் மத்திய அரசின் 'வைப்ரண்ட் கிராமத் திட்டத்தின்' (Vibrant Village Programme) கீழ், அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் உள்ள சுமார் 150 எல்லைக் கிராமங்கள் தற்போது சிறந்த சுற்றுலாத் தளங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. புதிய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட இணைப்பு வசதிகளுடன் இந்தக் கிராமங்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையங்களாக உருவெடுத்துள்ளன.
மத்திய அரசின் Vibrant Village Programme என்பது, இந்திய - சீன எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமாகும். இந்தக் கிராமங்களை மேம்படுத்துவதன் மூலம், கிராம மக்களின் வறுமையைக் குறைத்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், மற்றும் எல்லைப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுவதைத் தடுத்தல்
ஆகியன இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். இந்தத் திட்டத்தின் கீழ், சாலைகள், குடிநீர், சுகாதாரம், மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படுகின்றன. இது, எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களைத் தன்னிறைவு பெற்றதாகவும், பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மாற்றுவதை வலியுறுத்துகிறது.
மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ், அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் உள்ள சுமார் 150 எல்லைக் கிராமங்கள் தற்போதுப் புதிய உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையங்களாக மாறி வருகின்றன. சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் தவாங் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு வசதிகள் துரிதமாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள், Vibrant Village Programme-ன் இரண்டாம் கட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக இந்த கிராமங்களில் விரிவான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், சமீப காலமாகத் தவாங் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, தவாங்கில் ₹147 கோடி செலவில் கட்டப்பட்ட அதிநவீன ஒருங்கிணைந்த மாநாட்டு மையத்தை ஏற்கனவேத் திறந்து வைத்தார். கடந்த ஆண்டு, எல்லையில் உள்ள படைவீரர்களுக்கான தளவாட வசதிகளை எளிதாக்குவதற்காக, உலகின் மிக நீளமான இரட்டை வழிச் சாலையிலான Sela சுரங்கப் பாதை அருணாச்சலப் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இது தவாங் பகுதியில் இணைப்பை வெகுவாக மேம்படுத்தியுள்ளது. Mago மற்றும் Chuna போன்ற புதிய இடங்களை நோக்கிச் சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். தவாங் பகுதியின் சூழலியல் மிகவும் Fragile தன்மை கொண்டது என்பதால், சுற்றுச்சூழல் உணர்திறனுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் இடையில் சமநிலையைப் பேணிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.