ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்!
ஏற்காடு சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கிளியூர் நீர்வீழ்ச்சியைப் பார்க்க வந்த இளைஞர் ஒருவர், நீர்வீழ்ச்சிக்குக் கீழ் உள்ள பாறைகள் மீது ஏறியபோது, எதிர்பாராதவிதமாக அவரது கால் பாறை இடுக்குகளில் சிக்கிக்கொண்டது. இதனால், அவர் வெளியே வர முடியாமல் தவித்துள்ளார்.
இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு, ஒரு மணி நேரத்திற்கும் மேலாகச் சிரமப்பட்டு அந்த இளைஞரின் காலை பாறை இடுக்குகளிலிருந்து பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
in
தமிழகம்