டாக்டர் அச்சுதனன் தலைமையில் மாபெரும் விழிப்புணர்வு; சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் வினோத்காந்தி தொடங்கி வைத்தார்!
ராணிப்பேட்டை: உலகத் தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள ஜிவன் லைஃப் கேர் நிறுவனம் சார்பில், தற்கொலை தடுப்பு குறித்த மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி டாக்டர் அச்சுதனன் தலைமையில் துவங்கியது.
ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்தப் பேரணியில், சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் ஆர்.வினோத்காந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேரணியைத் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியில் செயலாளர் பி.பூங்காவனம், நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், நகர மன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தற்கொலை எண்ணங்களைத் தடுப்பது, மன ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மற்றும் உதவி தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளிப்பது குறித்து இந்தப் பேரணியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தப் பேரணி, பொதுமக்களிடையே தற்கொலை தடுப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.