மகளுக்கு நடந்தது யாருக்கும் நடக்கக்கூடாது என இலவச சட்ட உதவி சேவை தொடக்கம்; ரிதன்யா சோஷியல் சர்வீஸ்!
தங்கள் மகளுக்கு நேர்ந்த துயரம் வேறு எந்தப் பெண்ணுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்ற உயரிய நோக்கில், திருப்பூர் ரிதன்யாவின் பெற்றோர், அவரது பெயரில் ரிதன்யா சோஷியல் சர்வீஸ் என்ற இலவச சட்ட ஆலோசனைச் சேவையைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சேவைக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்தச் சேவை குறித்துப் பேசிய ரிதன்யாவின் பெற்றோர், இங்குள்ள எல்லா மகள்களும் எங்கள் மகள் ரிதன்யாதான் எனக் கண்ணீருடன் தெரிவித்தனர். பெண்களுக்கான அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நாங்கள் இலவச சட்ட ஆலோசனைகளை வழங்குவோம். அந்தப் பிரச்சனைகள் தீரும் வரை, நாங்கள் அவர்களுடன் உறுதுணையாக இருப்போம். எங்கள் மகளுக்கு நடந்தது யாருக்கும் நடக்கக்கூடாது என்பதால்தான் இந்தச் சேவையைச் செய்கிறோம் என உருக்கமாகக் கூறினர்.
இது முதற்கட்டம்தான் என்றும், வருங்காலத்தில் ஏழை எளியோர் அனைவருக்கும் உதவுவோம் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஒரு தனிப்பட்ட சோகத்தை, சமூகப் பணிக்கான உந்துதலாக மாற்றிய ரிதன்யாவின் பெற்றோர், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.