நாகூர் ஆண்டவர் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லையெனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் குற்றச்சாட்டு!
நாகப்பட்டினத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களான வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரை ஆகியவற்றை மேம்படுத்தினால் தமிழக அரசுக்கு என்ன குறைந்து போய்விடும் எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கேள்வி எழுப்பினார். மேலும், நாகூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
நாகப்பட்டினம் புத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரை போன்ற சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தினால் என்ன குறைந்து போய்விடுவீர்கள்? நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர்களே இல்லை என்றார்.
மேலும், நாகை புதிய பேருந்து நிலையம் சுத்தமாக இல்லை. ரயில் நிலைய வேலைகள் தாமதமாக நடக்கின்றன எனவும் அவர் குற்றம்சாட்டினார். மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.