மீனவர்களுக்கு நான் குரல் கொடுப்பது இது முதல் முறை அல்ல - நாகை பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஆவேசம்!
மீன் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள நாகையில் முன்னேற்றம் இல்லை. உழைக்கும் மக்கள் நிறைந்திருக்கும் இந்த ஊர் புறக்கணிக்கப்பட்டுள்ளது" எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தான் களத்திற்கு வந்தது புதிதல்ல எனவும் அவர் கூறினார்.
நாகப்பட்டினம் புத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், மீன் ஏற்றுமதியில் முன்னணி மாவட்டங்களில் ஒன்றான நாகையில் முன்னேற்றமே இல்லை. உழைக்கும் மக்கள் இருக்கும் ஊர் இது. ஆனால், இவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூடச் செய்து தரப்படவில்லை என அரசு மீது குற்றம்சாட்டினார்.
மேலும், நான் மீனவர்களுக்குக் குரல் கொடுப்பது இது முதல் முறையல்ல. 14 வருடங்களுக்கு முன்பாகவே பேசியிருக்கிறேன். நான் களத்திற்கு வருவது புதியதல்ல; என்றைக்கோ வந்துவிட்டோம்" என அவர் ஆவேசமாகப் பேசினார்.