சுற்றுலாத் துறையில் தமிழ்நாடு புதிய மைல்கல் - உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்! Tourism Minister R. Rajendran Announces Significant Tourist Growth

சுற்றுலாத் துறையில் தமிழ்நாடு புதிய மைல்கல் - உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்! Tourism Minister R. Rajendran Announces Significant Tourist Growth

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கணிசமான வளர்ச்சி; அமைச்சர் இரா.இராஜேந்திரன் பெருமிதம்!


தமிழகத்தில் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ளதாக, சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள சுற்றுலா வளாகத்தில், மாவட்டவாரியாகச் சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் இரா.இராஜேந்திரன், முதல்வர் வழிகாட்டுதலின்படி சுற்றுலாத் துறையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனக் கூறினார். அதன் காரணமாக, ஜூலை 2025 வரை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 20.35 கோடியாகவும், வெளிநாட்டுப் பயணிகளின் வருகை 7.80 இலட்சமாகவும் உயர்ந்துள்ளது எனத் தகவலை வெளியிட்டார்.

பொழுதுபோக்கு, பாரம்பரியம், ஆன்மிகம், பண்பாடு, மருத்துவம் மற்றும் UNESCO புராதன சின்னங்கள் எனப் பல்வேறு வகையான சுற்றுலாத் தலங்கள் தமிழ்நாட்டில் இருப்பதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆண்டுதோறும் வெகுவாக அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுலாத் தலங்களில் அடிப்படை வசதிகள், இணையவழி சுற்றுலா வழிகாட்டி வசதிகள், மலையேறுதல் போன்ற பயணிகளை ஈர்க்கும் திட்டங்களை உருவாக்கி, வருவாயை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனச் சுற்றுலா அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks