திருவாரூர் மக்களின் பெருமைக்குரிய அடையாளத்தைப் புகழ்ந்து பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்!
திருவாரூர், செப்டம்பர் 20: திருவாரூர் என்றதுமே தியாகராஜர் கோயில் ஆழித்தேர்தான் உடனடியாக நினைவுக்கு வரும். அது இந்த மண்ணின் அடையாளம் எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெருமிதத்துடன் பேசியுள்ளார்.
விஜய், பல்வேறு மாவட்டங்களில் தனது அரசியல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "திருவாரூர் என்றதுமே தியாகராஜர் கோயில் ஆழித்தேர்தான் உடனடியாக ஞாபகத்திற்கு வரும். திருவாரூர் தேர்னா சும்மாவாங்க... அது இந்த மண்ணோட அடையாளம் ஆச்சே எனத் திருவாரூர் மக்களின் பெருமைக்குரிய அடையாளத்தைப் புகழ்ந்து பேசினார்.