திருவாரூர் ஆழித்தேரை உதாரணம் காட்டி தமிழக அரசைச் சாடிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்!
திருவாரூர், செப்டம்பர் 20: நன்றாக ஓடிக்கொண்டிருந்த தமிழ்நாடு என்ற தேரை, நான்கு பக்கமும் கட்டை போட்டு அசையாமல் நிப்பாட்டிவிட்டார்" எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வரை ஆவேசமாக விமர்சித்துள்ளார். திருவாரூர் ஆழித்தேரை உதாரணம் காட்டி அவர் பேசியது தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், ரொம்ப நாளாக ஓடாமல் இருந்த இந்தத் திருவாரூர் தேரை, ஓட்டியது நான்தான் என மார்தட்டிச் சொன்னது யாரென்று உங்களுக்குத் தெரியும். ஆனால், அவருடைய மகன், மாண்புமிகு முதலமைச்சர், இப்போது என்ன செய்கிறார்? எனக் கேள்வி எழுப்பினார்.
நன்றாக ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை, நாலாப் பக்கமும் கட்டையைப் போட்டு, ஆடாமல், அசையாமல் அப்படியே நிப்பாட்டிவிட்டார். இதை அவர் பெருமையாகவும், சவாலாகவும் சொல்லிக் கொள்கிறாரெனத் தமிழக அரசை ஆவேசமாகச் சாடினார்.