கோவையில் சோகம்; தனிமையில் இருந்ததால் விபரீத முடிவு என போலீசார் தகவல்!
கோயம்புத்தூர், போத்தனூர், பிள்ளையார்புரம், காந்திநகரைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி ஒருவர், தந்தையின் மறைவால் ஏற்பட்ட மன உளைச்சலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பி.எஸ்.சி. சி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்த சந்தியா (21), படிப்புடன் துணிக்கடை ஒன்றில் பகுதி நேர வேலையும் செய்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இவரது தந்தை உயிரிழந்த நிலையில், சந்தியா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவர் தனிமையாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, தனது துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்துத் தகவல் அறிந்த சுந்தராபுரம் போலீசார், சந்தியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையின் மறைவால் ஏற்பட்ட மன உளைச்சலில் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.