Street Dog Conflict: தெரு நாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு தொல்லை: சுற்றறிக்கை தேவையில்லை - புளூ கிராஸ் அமைப்பிற்கு டிஜிபி பதில் கடிதம்! Tamil Nadu DGP Responds to Blue Cross Letter

Street Dog Conflict: தெரு நாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு தொல்லை: சுற்றறிக்கை தேவையில்லை - புளூ கிராஸ் அமைப்பிற்கு டிஜிபி பதில் கடிதம்! Tamil Nadu DGP Responds to Blue Cross Letter

நாடு தழுவிய தெரு நாய் பிரச்சினை; காவல்துறை முறையாக நடவடிக்கை எடுக்கும் என டிஜிபி உறுதி!

நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் தெரு நாய்கள் விவகாரத்தில், தெரு நாய்களுக்கு உணவளிப்போருக்கு அளிக்கப்படும் தொல்லைகள் தொடர்பாகக் காவல் நிலையங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லையென, தமிழக காவல்துறை டிஜிபி வெங்கடராமன் புளூ கிராஸ் இந்தியா அமைப்பிற்குப் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

சமீபகாலமாக, தெரு நாய்கள் விவகாரம் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறி வருகிறது. தெரு நாய்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் இரு தரப்பினர் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். தெரு நாய்களுக்கு உணவு அளிப்பதைத் தடுப்பவர்களுடன் ஏற்படும் வாக்குவாதங்கள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக, விலங்குகள் நல ஆர்வலர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, புளூ கிராஸ் இந்தியா அமைப்பு தமிழக டிஜிபி-க்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், தெரு நாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு மிரட்டல் மற்றும் தொல்லைகள் தொடர்ந்து வருவதாகவும், இதைத் தடுக்க அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பும்படியும் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்தக் கோரிக்கைக்குப் பதிலளித்த டிஜிபி, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில், இது போன்ற குற்றங்களுக்குத் தனிப்பட்ட சுற்றறிக்கை அனுப்ப வேண்டிய தேவையில்லை எனவும், காவல் நிலையங்களில் உரிய புகார் அளிக்கப்பட்டால், முகாந்திரம் உள்ள குற்றங்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks