நீங்கள் மக்களுடனேயே இல்லையே - தி.மு.க. அரசை விமர்சித்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர்!
உங்களுடன் ஸ்டாலின்... உங்களுடன் ஸ்டாலின்... என்று உங்கள் குடும்பத்திற்கு மட்டும் தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், நீங்கள் மக்களுடனேயே இல்லையே" எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தி.மு.க. அரசையும், முதல்வரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருவாரூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் என்ற வாசகங்களைக் கேட்டிருப்பீர்கள். உங்கள் குடும்பத்திற்கு மட்டும் தான் அது பொருந்தும். நீங்கள் மக்களுடனே இருப்பதில்லையே. மக்கள் பிரச்சனை குறித்துக் கேட்டால், முதல்வர் வெளிநாடு சென்றுவிடுகிறார். அவர் வெளிநாடு சென்றது குறித்துப் பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஆனால், இன்று வரை அதற்குப் பதில் இல்லை என்றார்.
மேலும், மக்களிடமிருந்து விலகி இருக்கும் இந்த அரசு, 'மக்களுடன் ஸ்டாலின்' எனப் பேசுவது முரண்பாடானது"எனக் காட்டமாக விமர்சித்தார்.