சேலத்தில் கனமழை: வெப்பம் தணிந்து இதமான சூழல்!
மாலையில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி!
சேலம்: கடந்த சில நாட்களாகக் கடுமையான வெப்பம் நிலவி வந்த சேலத்தில், இன்று மாலை திடீரென பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான மற்றும் இதமான சூழல் நிலவுகிறது.
மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து, பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால், நகரின் பல சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் சென்று திரும்புவோர் மழையில் நனைந்தவாறு செல்கின்றனர்.
இந்த திடீர் மழை, வெயிலால் தவித்து வந்த மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
in
தமிழகம்