ஆர்சிபி அணியின் வரலாற்றில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நாள், துக்கம் நிறைந்ததாக மாறியதாக விராட் கோலி உருக்கம்!
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்சிபி) அணி கோப்பையை வென்றபோது ஏற்பட்ட சோகமான சம்பவத்தை நினைவுகூர்ந்து, முன்னாள் கேப்டன் விராட் கோலி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்சிபி) அணியின் வரலாற்றில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க வேண்டிய ஒரு நாள், சோகமானதாக மாறிவிட்டது என முன்னாள் கேப்டன் விராட் கோலி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
"ஆர்சிபி அணியின் கொண்டாட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் நான் தினமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். இந்த இழப்பு எங்கள் அணியின் வரலாற்றின் ஒரு அங்கமாகி விட்டது. அன்பு, அக்கறை, மரியாதையுடன் நாம் அனைவரும் ஒன்றாக முன்னோக்கிச் செல்வோம்" என்று கோலி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட துயர சம்பவத்தை நினைவு கூர்ந்து கோலி இவ்வாறு பதிவிட்டுள்ளார்.