சாலையில் சிதறிய மூட்டைகளால் ஸ்தம்பித்த போக்குவரத்து; பள்ளி, அலுவலகம் செல்வோருக்கு கடும் அவதி!
சேலம் சீல்நாய்க்கன்பட்டி புறவழிச்சாலையில், போலீசார் வைத்திருந்த இரும்புத் தடுப்பைக் கடந்து வந்த மரத்தூள் கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று பாரம் தாங்காமல் திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தின் காரணமாக லாரியிலிருந்த மூட்டைகள் அனைத்தும் சாலையில் சிதறிக் கிடந்தன. இந்த மூட்டைகளால் முக்கியச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலையில் வேலைக்குச் செல்வோர் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் எனப் பலரும் இதனால் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சம்பவம்குறித்துத் தகவல் அறிந்த போலீஸார், உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சாலையில் சிதறிய மூட்டைகளை அகற்றி, போக்குவரத்தைச் சீர்செய்யும் பணிகளில் அவர்கள் முழுவீச்சில் ஈடுபட்டனர். லாரியை அப்புறப்படுத்திய பின்னரே போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.