வாரச்சந்தை பகுதியில் அதிரடி சோதனை; போலி லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல்!
குமாரபாளையத்தில் போலி லாட்டரி டிக்கெட்டுகளை விற்றதாகக் கூறப்படும் கூலித் தொழிலாளி ஒருவர், போலீசார் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பனை நடைபெறுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் எஸ்.ஐ. பிரபாகர் தலைமையிலான போலீசார் வாரச்சந்தை பகுதியில் திடீர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்குப் போலி லாட்டரி விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கோபால் (33) என்பவரைப் போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர்.
பின்னர், அவரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த போலி லாட்டரி டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.