நான் உயிருடன் இருக்கிறேன்.. மரண வதந்திக்குப் பதிலடி கொடுத்த நடிகை காஜல் அகர்வால்! Kajal Aggarwal Denies Death Rumours, Posts on X Platform

 நான் உயிருடன் இருக்கிறேன்.. மரண வதந்திக்குப் பதிலடி கொடுத்த நடிகை காஜல் அகர்வால்! Kajal Aggarwal Denies Death Rumours, Posts on X Platform

விபத்தில் உயிரிழந்ததாகப் பரவிய வதந்தி; ரசிகர்கள் அதிர்ச்சி; அனைத்தும் பொய் என எக்ஸ் தளத்தில் நடிகை விளக்கம்!

பிரபல நடிகை காஜல் அகர்வால் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டதாகச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவி வந்த வதந்திகளுக்கு, நடிகையே நேரடியாகப் பதிலளித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இந்த வதந்திகுறித்து, அது மிகவும் காமெடியாக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளதால், ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் நடிகை காஜல் அகர்வால் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக ஆதாரமற்ற செய்திகள் பரவி வந்தன. இந்த வதந்தி அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை காஜல் அகர்வால் தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர், நான் ஒரு விபத்தில் சிக்கியதாகக் கூறும் சில ஆதாரமற்ற செய்திகளை நான் கண்டேன். உண்மையைச் சொன்னால், அது மிகவும் காமெடியாக இருக்கிறது, ஏனெனில் அது முற்றிலும் பொய்யானது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கடவுளின் அருளால், நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன், பாதுகாப்பாக இருக்கிறேன், மிகவும் நன்றாக இருக்கிறேன் என்பதை உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். இது போன்ற தவறான செய்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று நான் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன், என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியில் 2004-ம் ஆண்டு அறிமுகமாகி, பின்னர் தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். தமிழில் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துப் பிரபலமானார்.

 திருமணத்திற்குப் பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர், சமீபத்தில் வெளியான கண்ணப்பா படத்தில் பார்வதி தேவி வேடத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். அவரது புதிய பதிவு, ரசிகர்கள் மத்தியில் இருந்த குழப்பத்தையும், கவலையையும் நீக்கி, அவருக்கு நல்லெண்ணத்தை உருவாக்கியுள்ளது.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks