ஜடேஜா, பும்ராவுடன் இளம் பட்டாளம் களம் இறங்குகிறது; ஜெய்ஸ்வால், கில், சாய் சுதர்சன் அணியில் இடம்! - ரசிகர்கள் உற்சாகம்!
விளையாட்டுச் செய்தி, செப்டம்பர் 26: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் அனுபவ வீரர்களுடன், பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அணி, அனுபவ வீரர்களான ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், பும்ரா போன்றோருடன், இளம் பட்டாளமான யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், தேவ்தத் படிக்கல், சாய் சுதர்சன் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோரையும் உள்ளடக்கியுள்ளது. இவர்களுடன், கே.எல். ராகுல், ஜெகதீசன், வாசிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி, அக்சார் படேல், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படுவதாகத் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. இந்த இளம் வீரர்களின் அதிரடி ஆட்டம் டெஸ்ட் தொடருக்குப் புதிய உற்சாகத்தைக் கொடுக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
in
விளையாட்டு