திடுக்கிடும் திருப்பம்! பிரபல நடிகர்கள் மம்மூட்டி, பிரித்விராஜ், துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிரடி சோதனை: 20 கார்கள் பறிமுதல்! Sensational raid on Dulquer Salmaan, Mammootty's homes

பூடான் ராணுவ வாகனங்கள் கடத்தல் விவகாரம்; ‘ஆபரேஷன் நும்கூர்’ எனப் பெயரிட்டு சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி! - முறையான ஆவணங்கள் இல்லை என பரபரப்புத் தகவல்!

கொச்சி, செப்டம்பர் 25: பூடான் ராணுவம் விற்பனை செய்த வாகனங்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, பிரபல மலையாள நடிகர்களான மம்மூட்டி, பிரித்விராஜ், துல்கர் சல்மான் ஆகியோரின் வீடுகள் உள்பட கேரளாவில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சோதனையில் 20-க்கும் மேற்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பூடான் ராணுவம் ஏலத்தில் விட்ட 190-க்கும் மேற்பட்ட பழைய வாகனங்களை ஒரு கும்பல் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கொண்டு வந்து, போலியான ஆவணங்கள் மூலம் பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது மத்திய சுங்கத்துறைக்குத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ‘ஆபரேஷன் நும்கூர்’ என்ற பெயரில், நேற்று காலை கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு உட்பட பல இடங்களில் சுங்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் இருந்து 2012-ல் சென்னையில் பதிவு செய்யப்பட்ட லேண்ட்ரோவர் கார் உட்பட 2 கார்கள் கைப்பற்றப்பட்டன. நடிகர் அமித் சக்காலைக்கல் வீட்டில் இருந்து 2 லேண்ட்க்ரூசர் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 17 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நடிகர் மம்மூட்டி வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது, அங்கு இருந்த அனைத்துக் கார்களுக்கும் முறையான ஆவணங்கள் இருந்ததால், கார்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. இதேபோல், நடிகர் பிரித்விராஜின் திருவனந்தபுரம் வீட்டில் கார்கள் எதுவும் இல்லாததால், அதிகாரிகள் சோதனை நடத்தாமல் திரும்பினர்.

இந்தச் சோதனை தொடர்பாக சுங்கத்துறை ஆணையர் டிஜு தாமஸ் கூறுகையில், “பறிமுதல் செய்யப்பட்ட பல கார்களுக்கு இன்சூரன்ஸ் அல்லது சாலை தகுதிச் சான்றிதழ்கள் கிடையாது. இந்த கார்கள் சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தெரிந்தும் தெரியாமலும் இந்த கார்களை வாங்கியிருக்கலாம். ஆனால், இது சாதாரண குற்றம் கிடையாது. இது கைது நடவடிக்கை வரை செல்லும்” என்று தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Durex Condoms

"நீங்கள் நம்பும் பாதுகாப்பு" - இப்போதே வாங்குங்கள்!