வக்பு வாரியத் தலைவர் நவாஸ் கனிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்! High Court slams Waqf Board in Mosque fund embezzlement case

வக்பு வாரியத் தலைவர் நவாஸ் கனிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்! High Court slams Waqf Board in Mosque fund embezzlement case

மசூதி நிதி முறைகேடு வழக்கில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு; வக்பு வாரியத்திற்கு கடும் கண்டனம்!

வாலாஜா பஜார் மசூதி நிதியை முறைகேடு செய்ததாகக் கூறப்படும் வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் வக்பு வாரியத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரும், ராமநாதபுரம் எம்.பி.யுமான நவாஸ் கனி, வரும் 19-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் பயாஸ் அகமது, வக்பு வாரியத் தலைவர் நவாஸ் கனிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "வாலாஜா பஜார் மசூதி நிதியை எச்.ஆர். திப்பு என்பவர் முறைகேடு செய்ததாக, கடந்த 2022 செப்டம்பர் 15-ஆம் தேதி வக்பு வாரியத்தில் புகார் அளித்தேன். 

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டாலும், வக்பு வாரியத் தலைவர் இறுதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. இதனால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2024 பிப்ரவரி 28-ஆம் தேதி, இருதரப்புக்கும் வாய்ப்பளித்து விசாரணை நடத்தி இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், இதுவரை இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. எனவே, நவாஸ் கனி மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பயாஸ் அகமது குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுனில் குமார் ராஜேந்திரன் வாதாடினார். வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை வரும் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன், அதற்குள் நவாஸ் கனி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks