தங்கம் விலை விண்ணை முட்டுகிறது: விலையைக் குறைக்க ஈ.ஆர்.ஈஸ்வரன் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்! Gold Price Soars: E.R. Eswaran Urges Government to Intervene

தங்கம் விலை விண்ணை முட்டுகிறது: விலையைக் குறைக்க ஈ.ஆர்.ஈஸ்வரன் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்! Gold Price Soars: E.R. Eswaran Urges Government to Intervene

ஏழை மக்கள் ஒரு குண்டு மணி தங்கம் வாங்கவும் வழியில்லை' - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் வேதனை!

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து, இன்று வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், தங்கத்தின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை மக்களின் நலன் கருதி அரசு தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்குத் தங்கம் அத்தியாவசியத் தேவையாக இருக்கும் நிலையில், விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் தங்கம் வாங்குவது என்பது எட்டாக்கனியாக மாறியுள்ளது என ஈ.ஆர்.ஈஸ்வரன் வேதனை தெரிவித்துள்ளார். எவ்வளவு விலை உயர்ந்தாலும், அதிக வட்டிக்குக் கடன் வாங்கியாவது தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்கம் விலை உயர உயர, பதுக்கல் காரர்களின் நடவடிக்கைகளும் அதிகரிக்கும் எனவும், இதனால் தங்கத்தை பணக்காரர்கள் மட்டுமே வாங்கக்கூடிய பொருளாக மாறிவிடும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். எனவே, நாட்டின் ஏழை எளிய மக்களின் நலன் கருதி, தங்கத்தின் விலையைக் குறைத்து கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தக்க நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என ஈ.ஆர்.ஈஸ்வரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks