சமோவா அணிக்காக 2026 டி20 உலக கோப்பை தகுதிச் சுற்றில் பங்கேற்பு; ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி!
வெல்லிங்டன்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர், தனது ஓய்வு முடிவை திடீரென திரும்பப் பெற்றுள்ளார். தனது தாயின் சொந்த நாடான சமோவாவுக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாட உள்ளார் என்ற இந்த அறிவிப்பு, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஒரு மாபெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓமனில் நடைபெற உள்ள 2026 டி20 உலக கோப்பைக்கான தகுதிச் சுற்றில் விளையாடும் சமோவா அணியில் டெய்லர் இடம் பிடித்துள்ளார். நீண்ட காலமாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த டெய்லர், மீண்டும் களத்திற்குத் திரும்புவது, சமோவா அணிக்கு ஒரு பெரும் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெய்லரின் இந்த முடிவு, விளையாட்டைத் தாண்டி, தாய் மண்ணின் மீதான அவரது அன்பையும், பற்றுதலையும் காட்டுவதாகப் பாராட்டப்படுகிறது.