இரும்பு வேலி அமைக்கும் திட்டத்துக்குத் தடை கோரிய வழக்கு; நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி நேரடியாக ஆய்வு!
யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகள் குறித்துப் பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதன் ஒரு பகுதியாக, யானைகள் வழித்தடங்களை மறித்து இரும்பு வேலி அமைக்கும் திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் உண்மை நிலையை நேரடியாக அறிவதற்காக நீதிபதிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வு, வழக்கில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
in
தமிழகம்