கோவை ரயில் நிலையத்தில் சென்னை செல்ல ரயிலில் ஏற முயன்ற பயணி கால் தவறி நடைமேலையில் நடைமேடையில் விழுந்து ரயிலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கோவை ரயில் நிலையத்திற்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக் கணக்கான ரயில்கள் வந்து செல்கின்றன. இதில் நாள்தோறும் ஆயிரக் கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து விமான மூலம் டெல்லி செல்வதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரை செல்லும் ரயிலில் சென்னை செல்வதற்காக டெல்லியைச் சேர்ந்த மனோஜ் குமார் என்ற பயணி ரயிலில் ஏற முயன்றார். அப்பொழுது அவரது கால் தவறி கீழே விழுந்ததில் நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே சிக்கி அவரது வலது கால் மற்றும் கை துண்டாகி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
அவரது உடலை மீட்டர் ரயில்வே காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உடமைகளை சோதனை செய்த போது அவரது தம்பி வினோத்குமார் ஜெயினிடம் அவரது சகோதரர் கால் தவறி வண்டியில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தெரிவித்தனர்.
இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கால் தவறி ரயிலில் சிக்கி பயணி உயிரிழந்த சம்பவம் கோவை ரயில் நிலையத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது .....
in
க்ரைம்