'எனக்கு நானே வெறுப்பாகி விட்டேன்': அரசு வங்கி வேலையை ராஜினாமா செய்த பெண்!
டெல்லியைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவர், தான் மிகுந்த ஆசையுடன் பெற்ற அரசு வங்கி வேலையை ராஜினாமா செய்திருப்பது பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தன்னுடைய இந்த முடிவுக்கு அவர் கூறிய காரணம், வேலையின் மீதான மன அழுத்தமும், மனச்சோர்வுமே ஆகும்.
கடந்த 2022-ஆம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் 'ஸ்கேல் ஒன்' அதிகாரியாகப் பணியில் சேர்ந்த வாணி, இரவு பகலாகக் கடினமாகப் படித்து இந்த வேலையைப் பெற்றார். ஆனால், மூன்று வருடங்கள் வேலை செய்தபிறகு, மன அமைதியை இழந்து, தனக்குத் தானே வெறுப்பு ஏற்படும் நிலையை அடைந்ததாக அவர் கூறினார்.
சலிப்பும் எரிச்சலும் நிறைந்த இந்த வாழ்க்கை முறையிலிருந்து விடுபடவே, தனது கனவு வேலையான அரசு வேலையை ராஜினாமா செய்ததாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த முடிவுக்கு எந்தவித வருத்தமும் இல்லை என்றும், இப்போது தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வு, வேலைத் தேடும் பலருக்கு அரசு வேலை என்பது ஒரு கனவாக இருக்கும் நிலையில், வேலையின் மன அழுத்தத்தால் ஏற்படும் தாக்கங்களை உணர்த்துவதாக அமைந்துள்ளது.