துபாயில் இரவு 8 மணிக்கு ஆட்டம்; முதல் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா - ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு!
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை (செப்டம்பர் 21) மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்குத் தொடங்க உள்ளது.
ஏற்கனவே லீக் சுற்றில் இரு அணிகளும் மோதிய நிலையில், அதில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் காரணமாக, நாளைய போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்தச் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். இதில், அதிகப் புள்ளிகளைப் பெறும் முதல் இரண்டு அணிகள் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்தத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் இறுதிப் போட்டியில் மோதும் வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பர் 4 சுற்றின் அட்டவணை (இந்திய நேரப்படி):
செப். 20 (இன்று): இலங்கை vs வங்கதேசம்
செப். 21 (நாளை): இந்தியா vs பாகிஸ்தான்
செப். 23: பாகிஸ்தான் vs இலங்கை
செப். 24: இந்தியா vs வங்கதேசம்
செப். 25 பாகிஸ்தான் vs வங்கதேசம்
செப். 26: இந்தியா vs இலங்கை