கோழிகளைத் திருடியதால் மோதல்.. தட்டிக் கேட்டவரைத் தாக்கி வேனை உடைத்த 7 பேர் கைது! 7 Arrested for Assault and Vandalism Near Tharamangalam

கோழிகளைத் திருடியதால் மோதல்.. தட்டிக் கேட்டவரைத் தாக்கி வேனை உடைத்த 7 பேர் கைது! 7 Arrested for Assault and Vandalism Near Tharamangalam

தாரமங்கலம் அருகே நடந்த சம்பவம்; புகார் அளித்ததால் போலீசார் அதிரடி நடவடிக்கை!


கோழிகளைத் திருடிச் சென்றதைக் கேட்டபோது, தொழிலாளி ஒருவரைத் தாக்கி அவரது வாகனத்தைச் சேதப்படுத்திய வழக்கில், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தாரமங்கலம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாரமங்கலம் அருகே உள்ள சேவகனூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சரவணன் வளர்த்து வந்த இரண்டு சேவல்களை, அதே பகுதியைச் சேர்ந்த செல்லதுரை, ரமேஷ், சதீஷ் ஆகியோர் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சரவணன் அவர்களைக் கேட்டபோது, அவர்கள் ஆத்திரமடைந்து, தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து சரவணனை கடுமையாகத் தாக்கியதோடு, அவரது சரக்கு வேனையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில், தாரமங்கலம் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த வன்முறையில் ஈடுபட்ட செல்லதுரை, ரமேஷ், சதீஷ் உட்பட 7 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks