மாதம்பட்டி ரங்கராஜ் மீது வழக்கு பதியுமா போலீஸ்? 6 மணி நேர விசாரணைக்குப் பின் ஜாய் கிறிஸ்டில்லா பேட்டி! Joy Christilla Madampatti Rangaraj case: Joy Christilla's 6-Hour Interrogation Police Investigation

மாதம்பட்டி ரங்கராஜ் மீது வழக்கு பதியுமா போலீஸ்? 6 மணி நேர விசாரணைக்குப் பின் ஜாய் கிறிஸ்டில்லா பேட்டி!  Joy Christilla Madampatti Rangaraj case:  Joy Christilla's 6-Hour Interrogation Police Investigation

யூடியூபர்கள் அவதூறு பரப்ப வேண்டாம்; அவர் என்னைத் திருமணம் செய்து கொண்டார்; என் குழந்தையின் தந்தை அவர் தான் - ஜாய் கிறிஸ்டில்லா ஆவேசம்!

மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்த ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்லாவிடம், ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் ஆறு மணி நேர விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், யூடியூபில் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராகக் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்.

சமீபத்தில் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜாய் அளித்த புகாரின் அடிப்படையில், துணை ஆணையர் அலுவலகத்தில் அவர் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்தார். விசாரணையின்போது, நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை அவர் சமர்ப்பித்தார்.

ஆறு மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், கடந்த இரண்டு வருடங்களாக மாதம்பட்டி ரங்கராஜுடன் எனது வாழ்க்கை குறித்துத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்துள்ளேன். மிக விரிவாகக் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் முழுமையாகப் பதிலளித்துள்ளேன். சில சமூக வலைதளங்களில், ரங்கராஜ் என்னை ஏமாற்றிவிட்டதாகச் செய்திகள் பரவுகின்றன. ஆனால், அவர் என்னைத் திருமணம் செய்து கொண்டார். யாரும் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், யூடியூபில் அவதூறாகப் பேசுபவர்களைக் கண்டித்த அவர், ஒரு பெண் வந்து புகார் அளித்தால், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று அர்த்தமில்லை. பல பெண்கள் வெளியே வராமல் முடங்கி இருக்கிறார்கள். உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், என் குழந்தையின் சாபம் உங்களைச் சும்மா விடாது என்று ஆவேசமாகப் பேசினார்.

விசாரணை திருப்திகரமாக இருந்தது. எனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். புகார் அளித்த பின் எனக்கு எந்த நெருக்கடியும் வரவில்லை. ஆனால், என் குழந்தைக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை காவல்துறையிடம் தெரிவித்துள்ளேன். மீண்டும் விசாரணைக்கு என்னை அழைக்கவில்லை. ரங்கராஜை அழைத்து விசாரிப்பதாகக் கூறினார்கள். விசாரணை அனைத்தும் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்மீது வழக்குப் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks