அதிர்வுகளால் மக்கள் அச்சம்; பூடான் மற்றும் மேற்கு வங்கத்தில் உணர்வு!
அசாம் மாநிலத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பூடான் மற்றும் மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டன.
அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இன்று காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறிச் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிர் இழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை. எனினும், அசாம் மாநில அரசு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.