தமிழக அரசு வேலை.. எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்: 375 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்! TNRD Recruitment 2025: Apply for Rural Development Jobs

தமிழக அரசு வேலை.. எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்: 375 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!  TNRD Recruitment 2025: Apply for Rural Development Jobs

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (TNRD) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல செய்தி! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TNRD) சார்பில், 375 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, குறைந்தபட்ச கல்வித்தகுதியான எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் 10-ஆம் வகுப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் மற்றும் ஓட்டுநர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைகளுக்கான மாத ஊதியம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரையென நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயது முதல் 32 வயது வரையிலான நபர்கள் இந்த அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், ஓட்டுநர் பணிக்கு உரிமம் (driving license) வைத்திருப்பது அவசியம்.

இந்த வேலைகளுக்கு ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 30.09.2025 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பித்துப் பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, அதிகாரபூர்வ அறிவிப்பைக் காண, கீழே உள்ள இணையதள முகவரியை அணுகலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்பு: https://www.tnrd.tn.gov.in/pdf/notification.pdf

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks