பணம் திருட்டு என புகார் அளித்த பிரமுகர்; பணத்துக்காகதான் வந்தேன், ஆனால் திருடவில்லை என பாலியல் தொழிலாளி பகீர் வாக்குமூலம் - மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை!
கடந்த 22-ஆம் தேதி, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் சதீஷ், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா என்ற பாலியல் தொழிலாளியை, குளித்தலையில் உள்ள ஒரு லாட்ஜுக்கு வரவழைத்துள்ளார். இருவரும் இரவு முழுவதும் அங்கேயே தங்கிய நிலையில், மறுநாள் காலை தனது பாக்கெட்டில் வைத்திருந்த ₹27,000 ரொக்கப்பணம் காணாமல் போனதைக் கண்டு சதீஷ் அதிர்ச்சியடைந்தார்.
சம்பவம் குறித்து குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்த சதீஷ், போதையில் சரண்யாவைத் தேடி அலைந்துள்ளார். பின்னர், தந்தை பெரியார் காவிரி பாலத்தில் சரண்யா தனது நண்பர் பிரசாந்த் என்பவருடன் பைக்கில் சென்றதைக் கண்டு, அவர்களை மடக்கிப் பிடித்து பணத்தைத் திருப்பித் தருமாறு தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்த், பைக்கின் சாவியால் சதீஷின் முகம் மற்றும் கையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்க, அங்கு விரைந்த போலீசார், சரண்யாவையும் பிரசாந்தையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது, பிரசாந்த் திருச்சி மாவட்டம் ஜீயபுரத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வருவது தெரியவந்தது.
காவல் நிலையத்தில் அழுது மன்றாடிய சரண்யா, பணத்துக்காகத்தான் இந்த வேலைக்கு வந்தேன். ஆனால் ஒரு ரூபாய் கூடத் திருடவில்லை. எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். என்மீதும் என் பசங்கள் மீதும் சத்தியமாகச் சொல்கிறேன் என்று பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். இருப்பினும், சதீஷ் அளித்த புகாரின் அடிப்படையில், சரண்யா மற்றும் பிரசாந்த் மீது பணத்திருட்டு மற்றும் தாக்குதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம், அரசியல் பிரமுகர் மற்றும் காவல்துறை அதிகாரி சம்பந்தப்பட்டிருப்பதால், மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
in
தமிழகம்